குற்றாலம் சாரல் விழாவில் படகு போட்டி-பரதநாட்டியம்
1 min read
Boat Race-Bharatnatyam at Courtalam Charal Festival
18.8.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் குற்றாலம் சாரல் திருவிழாவின் 2 வது நாள் சாரல் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவுரைப்படி சிறப்பாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் 2 வது நாள் சாரல் திருவிழா நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவுரைப்படி மாணவ மாணவிகளின் சதுரங்க வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் படகு போட்டி நாய்கள் கண்காட்சி பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சதுரங்கம் மற்றும் வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியிலும், ஐந்தருவி படகு குழாமில் படகுப்போட்டியும், குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் நாய்கள் கண்காட்சி, இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவர் மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சி. மேலகரம் பரதாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, கலைமாமணி மதுரை கோவிந்தராஜ் அவர்கள் வழங்கும் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி. கிருஷ்ணகிரி மருதம் குழுவினரின் கைச்சிலம்பாட்டம் நிகழ்ச்சி, சென்னை சேராஸ் கலைக்குழு வழங்கும் பரதநாட்டியம் நிகழ்ச்சி, புதூர் திரு கருப்பசாமி குழுவினரின் ஜிம்லா மேளம், சிவகாசி தமிழன் குழுவினரின் கரகாட்ட கிராமிய நிகழ்ச்சி, திருநெல்வேலி திருமதி விசாலாட்சி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி. கர்நாடக மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் திரைப்பட பின்னணி பாடகர் திரு கானா சேட்டு கலந்து கொள்ளும் கலந்தை ஜெயராம் வழங்கும் நெல்லை ஆனந்த ராகம் திரைப்படம் மெல்லிசை நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உயர் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.