முதலில் ஒப்புக்கொண்டு பின் தமிழக அரசு மறுக்கிறது’ -கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
1 min read
Rs 2000 crore deal with Trillion: Chief Minister M.K.Stal’s information…
5.9.2024
சென்னை, கிண்டி ராஜ்பவனில் நடந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இடையிலான கலந்துரையாடலில் கவர்னர் ரவி பேசியதாவது: பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் சேர முதலில் ஒப்புக்கொண்டு பின் தமிழக அரசு மறுக்கிறது. முதலில் கையெழுத்து போட ஒப்புதல் அளித்தனர். இப்போது தான் திடீரென மறுக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கற்றல் பணிகளின் திறன் மேம்படுத்தப்படும். வருங்கால சமூகத்தினரை கருத்தில் கொண்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது. பல்வேறு மாநிலங்கள் புதிய கல்வி கொள்கை திட்டத்தை ஏற்றுக்கொண்டன. சில மாநிலங்கள் மெல்ல, மெல்ல ஏற்று கொண்டு வருகின்றன. புதிய கல்வி கொள்கைக்கு மாற்று கிடையாது.
மத்திய அரசு, மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது. புதிய கல்விக் கொள்கையை அரசு உருவாக்கவில்லை. பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் தான் உருவாக்கி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.