மகா விஷ்ணு மீது மேலும் ஒரு புகார்
1 min read
One more complaint against Maha Vishnu
12.9.2024
பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு கடந்த வாரம் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.
அவருடைய பேச்சு சமூகவலைதளங்களில் வெளியாகிய நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், புகார்கள் வந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையில் மகா விஷ்ணுவை போலீசார் திருப்பூர் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக மகா விஷ்ணு மீது வழக்கறிஞர் பிரவீனா என்பவர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.