சீதாராம் யெச்சூரி காலமானார்
1 min read
Sitaram Yechury passed away
12.9.2024
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 19ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 72
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் யெச்சூரி செயல்பட்டு வந்தார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று தற்போது மூன்றாவது முறையாக அந்த பொறுப்பை அவர் கவனித்து வந்தார்.