தென்காசி மக்கள் நீதிமன்றத்தில் 703 வழக்குகள் சமரசத் தீர்வு
1 min read
703 cases settled in Tenkasi People’s Court
16/9/20224
தென்காசியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 703 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.
திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சாய் சரவணன் வழிகாட்டுதலின்படி தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல் தலைமையில் தென்காசி நீதிமன்ற வளாகத்தில் வைத்து மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி வட்ட சட்ட பணி குழுவின் தலைவர் (பொறுப்பு) மாரீஸ்வரி, முன்னிலை வகித்தார் . இதில் மதுரை மாவட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தங்கக் கனி , தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார் , குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பொன் பாண்டி மற்றும் உறுப்பினர்கள், வழக்கறிஞர் கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மக்கள் நீதிமன்றத்தில் தென்காசி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இட பிரச்சனை மற்றும் வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் 50, மோட்டார் வாகன விபத்து சம்பந்தமான வழக்குகள் 25, நிறைவேற்றுதல் மனு வழக்குகள் 11,
மேல் முறையீடு வழக்குகள் 2, வாகன அபராத தொகை வழக்குகள் 537, காசோலை மோசடி வழக்குகள் 14, திருமண தகராறு சம்பந்தமான வழக்குகள் 4, குற்றவியல் வழக்கு 1, நீதிமன்றத்திற்கு முன் வரும் வழக்குகள் 59 ஆக மொத்தம் 703 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டது.