கடையம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் Kumbabhishekam at the last Pathirakaliamman temple
1 min read16.9.2024
தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் (மூலஸ்தான கோவில்) கும்பாபிஷேகம் நடந்தது. அந்த கோவிலில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் விநாயகர், முருகன் சன்னதிகள் புதிதாக கட்டப்படடன். கோவிலில் உள்ள கிரானைட் கற்கள் அகற்றப்பட்டு கருங்கல் பதிக்கப்பட்டது. மேலும் சென்னி சித்தர் உருவச்சிலையும் அமைக்கப்பட்டது.
திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாக பூஜைகள் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, நவக்கிரக பூஜை தொடர்ந்து நடந்தது.
கடந்த சனிக்கிழமை பதினெட்டு பட்டி உள்ள பல புண்ணியத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக பக்தர்கள் கொண்டு வந்தனர். அன்று இரவு யாகசாலை பூஜை நடந்தது. ஞாயிறு அன்று 2 மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்து. இன்று காலை நான்காம் கால யாகபூஜை நடந்தது. அதன்பின் அம்மனுக்கு சக்தி ஏற்றுதல் நிகழ்ச்சியும், சப்பரம் இறங்கும் பாறையில் சிறப்பு பூஜையும் நடந்தது. இதனை அடுத்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் அம்மன் உள்பட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
கும்பாபிஷேகம் நடக்கும்போது எண்ணற்ற கருடன்கள் வானத்தில் வட்டமிட்டன.
கும்பாபிஷேகம் நிறைவடைந்தவுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவில அருகே பெரும்பள்ளமாக இருந்த வயல்வெளியை மேடாக்கி அதில் இரண்டு அறைகள் மற்றும் பெரிய அளவில் அன்னதான கூடம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் முழுமையாக நிறைவடையாவிட்டாலும் தொடர்ந்து வேலைகள் நடந்து வருகிறது.
கோவில் நடந்த யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகத்தை balaninfo என்ற யூ டியூப் சேனலில் பார்க்கலாம்.