‘இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்தால் தமிழகம் தடையாக இருக்காது’ – அப்பாவு பேட்டி
1 min read
‘Tamil Nadu will not be an obstacle if alcohol prohibition is brought across India’ – father interview
17.9.2024
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தின் கீழ், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள் 4-வது மண்டல பேரிடர் மீட்பு படை மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு இதனை திறந்து வைத்து உபகரணங்களை பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மது ஒழிப்பு மாநாடு நடத்துவதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “மது ஒழிப்பு என்பது ஒரு கட்சியின் கொள்கையாக இருக்கலாம். அந்த வகையில், மது ஒழிப்பு மாநாடு நடத்துவதில் எந்த தவறும் இல்லை. இந்திய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார். அவ்வாறு இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டால் தமிழகம் அதற்கு தடையாக இருக்காது” என்று தெரிவித்தார்.