மலைப்பாம்பிடம் சிக்கிய பெண் மரணப் பிடியில் இருந்து உயிர் தப்பினார்
1 min read
A woman who was caught by a python escaped with her life
20.9.2024
தாய்லாந்து நாட்டில் மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய பெண் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் தப்பினார்.
பாங்காங்கின் புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் ஆரோம் அருண்ரோஜ் (வயது 60). இவர் வழக்கம் போல் சமையலறைக்கு சென்ற போது ஒரு மலைப்பாம்பு அவரை காலில் ஏறி தொடையில் கடித்து இடுப்பு வரை விறு, விறு என சுற்றி அந்த பெண்ணை இறுக்கியது. அய்யோ, அம்மா என்ற அலறலுடன் ஜன்னல் அருகில் வந்து காப்பாற்றுங்க என கூக்குரலிட்டார். யாரும் வரவில்லை,
இரண்டரை மணி நேரம் கழித்து சிலர் வந்ததும் போலீசார் மற்றும் வன அலுவலர்கள் வந்து பாம்பை லாவகமாக பிடித்து பெண்ணின் இடுப்பில் இருந்து அகற்றினர்.
உடலில் பல பகுதிகளில் பாம்பு கடி காயம் இருந்தது. தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாம்புடன் சுற்றிய படங்கள் சமூக வலை தளத்தில் பரவியது.
தாய்லாந்தை பொறுத்தவரை மலைப்பாம்புகள் அதிகம் வாழுகிறது. இங்கு பாம்பு கடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2023ல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரப்படி தாய்லாந்தில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் 12 ஆயிரம் பேரை கடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பாம்பு கடித்து 26 பேர் கொல்லப்பட்டனர்