திருப்பத்தூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் சாவு
1 min read
Tirupattur: 3 people, including a father and a son, died after being caught in an electric fence
22.9.2024
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற தந்தை, மகன் உட்பட 3 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த சிங்காரம் (40 வயது) என்பவர் 9-ம் வகுப்பு படிக்கும் தனது மகன் லோகேஷ் (14 வயது) மற்றும் கரிபிரான் (60 வயது) ஆகியோருடன் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் நேற்று இரவு வனவிலங்கு வேட்டைக்காக சென்றுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி பொருத்தியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் மூவரும் வனவிலங்கு வேட்டைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து வனத்துறை மற்றும் குரிசிலாப்பட்டு போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.