கீழஆம்பூர் காசிவிசுவநாதசுவமி கோவில் அறங்காவலர் குழு பதவியேற்பு
1 min read
Inauguration of Board of Trustees of Kashiviswanathaswamy Temple in Keezaampur
1.10.2024
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கீழஆம்பூர் காசிவிசுவநாதசுவமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
கடையம் அருகே உள்ள கீழஆம்பூர் அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம்,கீழ் ஆம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு விழா நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவராக கீழாம்பூர் மூர்த்தி, உறுப்பினர்களாக மஞ்சபுளி தெரு சுரேஷ், கீழாம்பூர் கிருஷ்ணவேணி ஆகியோருக்கு நியமன உத்தரவினை உதவி ஆணையாளர் கவிதா வழங்கினார். தொடர்ந்து அவர்கள் பதவியேற்று, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார், கோவில் ஆய்வாளர் சரவணகுமார் செயல் அலுவலர் கேசவ ராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.என்.எல்.சுப்பையா, குழு உறுப்பினர்கள் சண்முகவடிவு ஜெய்குமார் பாண்டியன், சங்கரநாராயணன், வேல்முருகன், காலசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமாரிடம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனர்.