June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் விமானப்படை சாகசம்; வானில் வர்ண ஜாலத்தை காண மக்கள் வெள்ளம்

1 min read

Air force adventure in Chennai; People flock to see the rainbow in the sky

6.10.2024
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில், இன்று (அக்.,06) விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த சாகசத்தை கண்டு ரசித்தனர்.இந்திய விமானப்படை நிறுவன தினம் அக்., 8ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு விமானப்படை நிலையங்களில், அணிவகுப்பு ஏற்பாடு தயாராகி வருகிறது. முதல் முறையாக தமிழகத்தில், பிரமாண்ட ‘ஏர் ஷோ’ இன்று (அக்.,06) காலை 11 மணிக்கு சென்னை, மெரினாவில் துவங்கியது.
முதலாவதாக, ஆகாஷ் கங்கா குழுவினர், 2000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து எம்.ஐ.,17 ஹெ லிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது.
எதிரிகளிடம் சிக்கிய பிணைக்கைதிகளை துணிகரமாக மீட்பது போன்ற கருடா கமாண்டோ படையினரின் சாகச ஒத்திகை, பார்வையாளர்களை கவர்ந்தது.


சென்னை மெரினா வான் சாகச நிகழ்ச்சியில், மூவர்ண பாராசூட் உடன் குதித்து பறந்து வந்து அசத்திய ஆகாஷ் கங்கா குழுவினர்.
பிரெஞ்சு விமான நிறுவனத்தின் தயாரிப்பான சேத்தக் ஹெலிகாப்டர்கள் வானில் வலம் வந்தன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சென்னை மெரினா கடற்கரையில், இந்திய விமான படையின் முக்கிய தாக்குதல் விமானமாக கருதப்படும், ரபேல் விமானங்கள் வலம் வந்தன. இடி முழக்கத்துடன் ரபேல் விமானங்கள் பறக்க கடற்கரையில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகம் அடைந்தனர்.
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட டகோடா போர் விமானம், இன்று சென்னை மெரினாவில் பறந்து பார்வையாளர்களை ஆரவாரம் செய்ய வைத்தது.
பயிற்சி விமானமான ஹார்வர்ட் விமானம் வானில் பட்டாம் பூச்சி போல் சிறகடித்து பறந்தது. தலைகீழாக பறந்து மெரினாவில் சாகசம் புரிந்து வியப்பில் ஆழ்த்தியது.
விரைவில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள rHTT40 விமானம் சாகசம் புரிந்து அசத்தியது.
2 ஆயிரம் கி.மீ., தூரம் செல்லக்கூடிய விமானம் மெரினா வான் பரப்பில் சாகசத்தில் ஈடுபட்டு சிலிக்க வைத்தது.
வானில் இருந்து போர் புரியும் திறன் உள்ள மிக் 29 ரக விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து மிரளச் செய்தன.
கடலோரப்படையின் P81 ரக விமானங்கள் மெரினா கடற்கரையில் சாகசம் புரிந்து மெய்சிலிர்க்கச் செய்தன.
சிறிய இலகுரக சூப்பர் சோனிக் விமானமான தேஜஸ் விமானங்கள் வானை வட்டமடித்து சாகசம் செய்தன.

ஜாகுவார் சாகசம்; மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள் கொண்ட ஜாகுவார் விமானங்கள் விண்ணில் வலம் வந்து சாகசம் நிகழ்த்தின.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.