குற்றாலத்தில் சர்வதச முதியோர் தின விழா- ஆட்சித்தலைவர் பங்கேற்பு
1 min read
Sarvathasa Senior Citizens Day Celebration at Courtalam- Head of State participates
13.10.2024
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை யுடன் குற்றாலம் ரோட்டரி சங்கம் இணைந்து குற்றாலம் ஏ.எம்.கே. முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடபட்டது.
இந்த விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர், தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து உலக முதியோர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி முதியோர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.
சர்வதேச முதியோர் தினத்தில் பசுமையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அவர்கள் மரக்கன்று நட்டார்கள். இவ்விழாவில் AMK முதியோர் இல்ல இயக்குநர் சாந்தி வரவேற்றார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் மதி இந்திரா பிரியதர்ஷினி மற்றும் மாவட்ட சமூகநல அலுவலர் மதிவதனா முன்னிலை வகித்தனர். குற்றாலம் ரோட்டரி சங்க தலைவர் கை. முருகன் சிறப்புரை வழங்கினார், தொழில் அதிபர் எம்.ஆர்.அழகராஜா, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுனர் கே.. ராஜகோபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த விழாவில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், சங்கரன், ராதாகிருஷ்ணன், சந்திரன், டாக்டர் அப்துல் அஜீஸ், கை.கணேசமூர்த்தி, இராமசாமி, இராமநாதன், சைரஸ் , மருதையா, காந்திமதிநாதன், திருஇலஞ்சிகுமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை
குற்றாலம் ரோட்டரி சங்கம் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள்
சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் கை.முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.