June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் ஐப்பசிவிசு திருவிழா – தேரோட்டம்

1 min read

Aipasivisu Festival at Courtalam – Chariot

13.10.2924
தென்காசி, மாவட்டம், குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில ஐப்பசி லிசுத்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

குற்றாலம் குற்றாலநாதவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 8 ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகன், இரவில் ஒவ்வொரு வாகனத்திலும் வீதியுலா நடந்து வருகிறது.

இந்த விழாவில் தேற்று முன்தினம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று காலை நான்கு தேர்கள் ஓடும் திருத்தேரோட்டம் நடைபெற்றது முதலில் விநாயகர், அடுத்தடுத்து முருகன் குற்றாலநாதர், குழல்வாய் மொழி அம்பாள் ஆகிய தேர்கள்
சிவ பூதகண வாத்தியங்கள் முழங்க ஒன்றன்பின் ஒன்றாக
இழுக்கப்பட்டது. ஐப்பசி விசு திருவிழாவிற்கான பூஜைகளை மகேஷ் பட்டர் தலைமையில் பிச்சுமணி பட்டர், கணேசன் பட்டர், ஜெய்மணி சுந்தரம் பட்டர் ஓதுவார் சங்கரநாராயணன ஆகியோர் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் வீர பாண்டியன் திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையா பாண்டியன், அகஸ்தியர் சத்சன்மார்க்க சபை முத்துக்குமாரசாமி, திமுக முன் னாள் ஒன்றிய செயலாளர் பா.துரை (எ) இராமையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர்‌. கிருஷ்ணராஜா, மேலகரம் அதிமுக செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக் குமார் வர்த்தக சங்க நிர்வாகிகள் காவையா அம்பலவாணன் ராஜ் மெஸ் வேல்ராஜ் குற்றாலம் செந்தூர் பாண்டியன் இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பெருமாள் கோவில் பணியாளர்கள் சுப்பிரமணியன் நடராஜன் சுகாதார மேற்பார்வையாளர் குருநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தகார் கவிதா உதவியாளர் இயக்க நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர் இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி டிஎஸ்பி நாகசங்கர் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சுரேஷ் ஆனந்த் கணேசன் மற்றும் வீரர்கள் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *