தென்காசி மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்த்தல்
1 min read
Tenkasi District Seermarapinar Welfare Board Member Addition
19.10.2024
தென்காசி மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான முகாம் வரும் 24.10.2024 அன்று நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை கல்வி உதவித்தொகை. திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத் தொகை ஈடு செய்தல். முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் 2) 18 வயது முதல் 50 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் 3) அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில் நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துநலத்திட்ட உதவிகள் பெற தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து கொள்ளவும். புதுப்பித்தல் தவறிய உறுப்பினர்களை மீள வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும். புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல். நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்துள்ளார்.