ஐதராபாத் மதுபான கூடத்தில் ஆபாச நடனம்- 42 பெண்கள் உட்பட 140 பேர் கைது
1 min read
Obscene dance in Hyderabad bar- 140 people including 42 women arrested
20.10.2024
ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஏராளமான மதுக்கூடங்கள் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.
மது போதையில் பொழுதை கழிப்பவர்களுக்கு பஞ்சராஹில்ஸ் பகுதி சொர்க்க பூமியாக இருந்து வருகிறது. இங்குள்ள தனியார் மதுபான கூடத்தில் ஆண் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களை நடனமாடும் பணியில் அமர்த்தினர். இந்த பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இந்த மதுபான கூடத்தில் கூட்டம் அலைமோதியது.
நேற்று இரவு சனிக்கிழமை என்பதால் அதிகளவில் கூட்டம் இருந்தது. ஆபாசமாக நடனமாடிய பெண்களுடன் வாலிபர்கள் உற்சாகமாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்த 42 பெண்கள் உட்பட 140 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபான கூடத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த கட்டிடத்துக்கு போலீசார் சீல் வைத்தனர். கைதானவர்களில் பலர் மது போதையில் இருந்தனர். பெரும் பணக்கார வாலிபர்களும் அதில் இருந்தனர்.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.