அ.தி.மு.க.வில் நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு
1 min read
Actress Gauthami is responsible for ADMK – Edappadi Palaniswami announcement
21.10.2024
நடிகை கவுதமி, பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்து வந்தார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.வில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்காக பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், கட்சியில் அவருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு கவுதமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, மேலும் சிலருக்கு கட்சியின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் துணை செயலாளராக தடா பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளராக பாத்திமா அலியும், கழக விவசாயப்பிரிவு துணை செயலாளராக சன்னியாசியும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.