விஜயை மறைமுகமாக மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்
1 min read
Vijay was indirectly M.K. Stalin criticized
4.11.2024
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழக இளைஞர்களை எல்லா நிலைகளில் இருந்தும் தகுதியுடைவர்களாக மாற்றுவதுதான் திராவிட மாடலின் லட்சியம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆனால் இன்னைக்கு இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் பார்க்கனும். யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, மூன்றரை ஆண்டுகளாக பல திட்டங்கள நிறைவேற்றி வருகிறோம். தேர்தலின்போது கூறிய உறுதி மொழிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். மீதமுள்ள ஒன்றிரண்டு உறுதி மொழிகளை வரும் காலத்தில் உறுதியாக நிறைவேற்றப் போகிறோம். இதில் எந்த மாற்றமும் கிடையாது. தொழிலில் தமிழ்நாடு முதல் இடத்தை பெற்றிருக்கிறது. தொலைநோக்கு அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சென்னையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த மழைக் காரணமாக தண்ணீர் தேங்கியது. தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு அடுத்த நாள் தண்ணீர் இல்லாத அளவிற்கு மாற்றியது. இதை சில மீடியாக்கள் கடந்த வருடம் தேங்கிய மழை வெள்ளம் படத்தை போட்டு பார்த்தீர்களா, மழை வெள்ளம் தேங்கியிருக்கு எனப்போட்டன. திமுக வளர்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதான் காரணம். அதனால்தான் யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம், புதுசா புதுசா கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டும் என்ற நிலையில்தான் போய் கொண்டு இருக்கிறார்களே தவிர…
விமர்சனம் செய்பவர்கள் இந்த மூன்றரை ஆண்டு சாதனைகளை எண்ணிப் பாருங்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க வசவாளர்கள். அதை பற்றியும் நாங்கள் கவலைப்படபோவதில்லை. எங்களுடைய போக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான்.
தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை. நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்கு பணியாற்றவே நேரம் கிடைக்கவில்லை. எந்த நம்பிக்கையில் எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்தீர்களோ, அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறோம்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.