தென்காசியில் காவல்துறை கவாத்து பயிற்சி
1 min readPolice parade training in Tenkasi
4/11/2-024
தென்காசி மாவட்ட காவல்துறை யினருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஶ்ரீனிவாசன் தலைமையில் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி உட்கோட்ட காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவல் துறையினருக்கு வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்து விரைவில் நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார். இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்களிலும் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள், காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.