December 8, 2024

Seithi Saral

Tamil News Channel

நான் வணிகத்துக்கு எதிரானவன் அல்ல- ராகுல் காந்தி விளக்கம்

1 min read

I am not against business – Rahul Gandhi explains

8.11.2024
மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, வணிகம் தொடர்பாக நேற்று முன்தினம் பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி இருந்தார்.அதில் அவர், ‘கிழக்கிந்தியக் கம்பெனி 150 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுப்போனாலும், அது உருவாக்கிய மூல பயம் ஏகபோகவாதிகளின் வடிவில் மீண்டும் அதன் இடத்தைப் பிடித்துள்ளது’ எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவரை பாஜக கடுமையாக விமர்சித்து இருந்தது. இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: ‘நான் சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வணிக விரோதியாக பாஜகவில் உள்ள சிலரால் சித்தரிக்கப்படுகிறேன். ஆனால் நான் வணிகத்துக்கு எதிரானவன் அல்ல. நான் ஏகபோகத்திற்கு எதிரானவன், தன்னலத்தை உருவாக்குவதற்கு எதிரானவன், ஒன்று அல்லது 2 அல்லது 5 நபர்களின் வணிக ஆதிக்கத்துக்கு எதிரானவன்’ என கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.