July 6, 2025

Seithi Saral

Tamil News Channel

“எனக்கு உடல் நல பாதிப்பு இல்லை”- சுனிதா வில்லியம்ஸ் தகவல்

1 min read

“I have no health problems” – Sunitha Williams informs

14/11/2024
அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 6-ந்தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.
ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. விண்வெளியில் சிக்கி உள்ள இருவரும் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.
இதில் சுனிதாவின் உடல் மெலிந்து காணப்பட்டதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனக்கு உடல்நல பாதிப்பு இல்லை என்று சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் தனது உடல்நலம் குறித்து வீடியோ நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:-
நான் இங்கு வந்தபோது இருந்த அதே எடையுடன் தான் இருக்கிறேன். தசை மற்றும் எலும்பு அடர்த்தியில் மைக்ரோ கிராவிட்டியின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்காக விண்வெளி வீரர்கள் பின்பற்றும் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருவதன் காரணமாகவே எனது உடலின் தோற்றம் மாறி விட்டது.

சைக்கிளிங்க், டிரெட் மில்லில் ஓடுதல் மற்றும் பளு தூக்குதல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை வழக்கம்போல் செய்து கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் மேற்கொள்வதால் என உடலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். எனது உடல் மாறி இருந்தாலும் அதே எடையில்தான் இருக்கிறேன் என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.