செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடமாடும் ஏடிஎம் சேவை
1 min read
Mobile ATM service at Sengottai railway station
14.11.2024
தமிழக கேரள எல்லை பகுதியான செங்கோட்டை ரயில் நிலையத்தில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கனரா வங்கியின் ஏடிஎம் நிறுவப்பட்டு பொதுமக்கள் ரயில் பயணிகள் பயனடைந்து வந்தனா். இதனையடுத்து அந்த ஏடிஎம் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் பயணிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா்.
இதனையடுத்து பொதுமக்கள் சிரமத்தை கவனத்தில் கொண்டு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் சங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலா் ராமன் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நடமாடும் ஏடிஎம் குறித்து கேள்விப்பட்டு வங்கி மேலாளரை நேரில் சந்தித்து நடமாடும் ஏடிஎம் சேவையை செங்கோட்டை ரயில் நிலையத்தில் மதியம் முதல் இரவு வரை நிறுத்துமாறு கோரிக்கை மனு அளித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட டிஎம்பி வங்கி மேலாளரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடந்த இரண்டு நாட்களாக நடமாடும் ஏடிஎம் வாகனத்தை செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்தார்.
மேலும் அவர் கூறியதாவது பொதுமக்கள் ரயில்பயணிகள் வசதிக்காக இந்த நடமாடும் ஏடிஎம் வாகனத்தை தற்காலிகமாக ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தியுள்ளோம் மேலும் பொதுமக்கள், இரயில் பயணிகள் கொடுக்கும் ஆதரவை பொறுத்தே இந்த சேவை தொடரும் என்றும் அனைவரும் ஆதரவளிக்க வேண்டுகிறோம் என கூறினார். கடந்த இரண்டு நாட்களாக செங்கோட்டை ரயில் நிலையம் முன்பு கொண்டு வந்து சில மணி நேரங்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிறுத்தியுள்ளது. இந்த வங்கி சேவையை செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், வட்டார ரயில் பயணிகள், ரயில் நிலைய அலுவலர்கள், ரயில் நிலைய குடியிருப்பு மக்கள் ,ரயில்வே ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள், டிக்கட் முன்பதிவு செய்ய வந்தவர்கள், அந்த பகுதியில் வசிக்கும் அரசு ஓய்வூதியர்கள் அனைவரும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனா்.