ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகிறார்
1 min read
ரஷிய அதிபர் புதின்
Russian President Putin arrives in India
19/11/2024
2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷியாவில் உள்ள காசான் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். ரஷிய அதிபர் புதினின் அழைப்பு ஏற்று பிரதமர் மோடியும் மாநாட்டில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதினிடம் உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்திற்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்று தெரிவித்தார். இதனையடுத்து ரஷிய அதிபர் புதினை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் அரசு முறை பயணமாக அடுத்த ஆண்டு இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கிரெம்ளின் அரண்மனை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறுகையில்,
இந்தியா – ரஷியா இடையே நல்ல நட்புறவு உள்ளது. புதினின் இந்தியா வருகை குறித்து அட்டவணைகளில் உள்ளது. அதிபர் புதின் இந்தியா வரும் தேதிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.
உக்ரைன் ரஷியா போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்படும் என கூறப்படுகிறது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் புதினின் இந்தியா வருகையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.