மதுபோதையில் 11-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்- ஆசிரியர் மீது புகார்
1 min read
Drunk teacher sexually harasses 11th grade student
24.11.2024
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு நடைபெற்றது. மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரன் மதுபோதையில், சிறப்பு வகுப்புக்கு வந்திருந்த ஒரு மாணவியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வகுப்பு முடிந்து வீடு திரும்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் செய்தனர். புகரின்பேரில் குற்றம் சாட்டப்பட்ட தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.