தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
1 min read
7 Maoists shot dead in Telangana
1.12.2024
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் கடந்த வாரம் போலீஸ் இன்பார்கள் என சந்தேகித்து பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து, அங்குள்ள மாவோயிஸ்டுகளை பிடிக்க சல்கபா வனப்பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 5.30 மணியளவில் மாவோயிஸ்டுகள் மற்றும் போலீசாரிடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் 35 வயதான பத்ரு என்ற மாவோயிஸ்டு கமிட்டி தலைவர் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.