திருப்பத்தூரில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ்- பயணிகள் உயிர் தப்பினர்
1 min read
Omni bus suddenly catches fire in Tirupattur… Passengers escape unhurt
1.12.2024
சென்னையிலிருந்து பெங்களூருக்கு 36 பயணிகளுடன் தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் லட்சுமிபுரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணியளவில் திடீரென பஸ்சில் தீவிபத்து ஏற்பட்டது.
சாலையில் சென்று கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்ட நிலையில், பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் வேகமாக இறங்கியதால் உயிர் தப்பினர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தனியார் சொகுசு பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.