இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை
1 min read20 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy released
3.12.2024
கடந்த 9 ஆம் தேதி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான ஜெரோம், மரிய ரொனால்ட், சரவணன், யாகோப், டைதாஸ், டென்னிஸ், ஆனந்த், அமலதீபன், சுவிதர், கிறிஸ்துராஜா, விஜய், ஜனன், லின்கன்,சர்மிஸ், சுதாஸ், மார்ஷல் டிட்டோ, தயாளன், தாமஸ் ஆரோக்கிய ராஜ், ஜான் பிரிட்டோ, ஜெயராஜ், சண்முகவேல், அருள், கிங்ஸ்லி ஆகிய 23 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
மீனவர்களின் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து ஊர்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ” 20 மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் மீண்டும் மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநர்கள் மூவருக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.