July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

ஒடிசாவில் கடந்த 5 மாதங்களில் 769 சிறுமிகள் பலாத்காரம்

1 min read

769 girls raped in Odisha in last 5 months

3.12.2024
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 769 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்குகள் பதிவாகி உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஒடிசா மாநில சட்டசபையில் பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ. ஆதிராஜ் மோகன் பாணிக்ரகியின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “ஜூன் 10 முதல் நவம்பர் 22 வரையிலான கடந்த 5 மாதங்களில் மாநிலம் முழுவதும் 769 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. 41 கூட்டு பாலியல் பலாத்காரம் உள்பட 509 பெண்கள் வன்புணர்வும் நடந்துள்ளன. மேலும் கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக 9 ஆயிரத்து 248 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதே நேரத்தில் 24 வரதட்சணை தொடர்பான மரணங்கள் மற்றும் 5,398 வரதட்சணை தொடர்பான சித்திரவதை வழக்குகள் பதிவாகியுள்ளன. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 509 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தள கட்சியை தோற்கடித்து கடந்த ஜூன் 12ம் தேதி ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.