ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையா?- திருமாவளவன் பேட்டி
1 min read
Action against Adhav Arjuna? – Thirumavalavan interview
6.12.2024
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, கூட்டணி அழுத்தம் காரணமாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவனால் கலந்துகொள்ள முடியவில்லை என த.வெ.க. தலைவர் விஜய் பேசியதற்கு மறுப்பு தெரிவித்தார்.
எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்கக்கூடிய அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல.
திமுகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவரிடம் விளக்கம் கேட்கப்படும். அவரது விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.