நெல்லை – தென்காசி – கொல்லம் பகல் நேர ரயில் இயக்க கோரிக்கை
1 min read
Request to operate Nellai – Tenkasi – Kollam daytime train
6.12.2024
தென்காசி வழியாக நெல்லை – கொல்லம் நேரடி பகல் நேர ரயில்களை இயக்க வேண்டும் தெற்கு ரயில்வே அதிகாரிகளை நேரில் சந்தித்து ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா சென்னையில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து பல்வேறு ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:–
மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கியதைப் போல தென்காசி வழியாக நெல்லை – கொல்லம் பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், செங்கோட்டையில் இருந்து பாவூர்சத்திரம், அம்பை வழியாக தாம்பரம் வரை செல்லும் 20683/20684 தாம்பரம் செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலை தினசரி இயக்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையிலிருந்து பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும், திருச்செந்தூர் – நெல்லை – தென்காசி – கொல்லம் ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும், தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்றும் வசதி ஏற்படுத்தி தென்காசி ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்ற வேண்டும், தென்காசி ரயில் நிலையத்தில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும், தென்காசி – செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டும், தென்காசி – பகவதிபுரம் இடையே ரயில்களின் வேகத்தை 110 ஆக அதிகரிக்க வேண்டும்.