கோவில்பட்டி சிறுவன் கொலையில் ஆட்டோடிரைவர் கைது
1 min read
Auto driver arrested in Kovilpatti boy’s murder
14.12.2024
கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன் – பாலசுந்தரி தம்பதியின் இளையமகன் கருப்பசாமி(வயது 10) அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 9-ந்தேதி கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது திடீரென மாயமானான்.
இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி மறுநாள் காலை பிணமாக மீட்கப்பட்டான்,
அவன் அணிந்திருந்த 13 செயின் மற்றும் மோதிரம் ஆகியவை மாயமாகி இருந்தது. இதை தொடர்ந்து சிறுவன் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது,.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் எதிர் வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் கருப்பசாமி என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து கொலை செய்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சிறுவன் கருப்பசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் இருந்து கூடவே ஆட்டோ டிரைவர் இருந்துள்ளார்., போலீசாருடன் சேர்ந்து கருப்பசாமியும் சிறுவனை தேடுவது போல் நடித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிறுவன் மரணத்தில் மரணத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பெற்றோர், உறவினர்கள் இளையரசனேந்தல் சந்திப்பில் மெயின்ரோட்டில் இன்று காலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்,
சிறுவனின் தாய் பாலசுந்தரி மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் வந்த போலீசார், அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.