எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி
1 min read
LK Advani admitted to hospital
14.12.2024
இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, அத்வானி கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.