கடையத்தில் 28, 29-ந் தேதிகளில் மாரத்தான், கபடி போட்டிகள்
1 min read
Marathon and Kabaddi competitions on the 28th and 29th at Kadayam
17.12.2024
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இளைஞர்களை(ஆண்கள் மற்றும் பெண்கள்) விளையாட்டுத்துறையிலும் கல்வித்துறையிலும் ஊக்குவிக்கும் வகையில் கடையம் யூத் பெடரேசன் ( கடையம் இளைஞர் கூட்டமைப்பு) தொடங்கப்பட்டது. கீழக்கடையத்தை தலைமை இடமாக கொண்டு இவ்வமைப்பு செயல்பட்டு வருகின்றது.
இந்த அமைப்பு சார்பாக வருகிற 28-ந் தேதி சனிக்கிழமை கடையம் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட வீரர்-வீராங்கனைகளுக்கான மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. மொத்த தூரம் 5 கிலோ மீட்டார். இதில் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்-பெண்கள் பங்கேற்கலாம். கடையம் தூய இம்மானுவேல் ஆலயம் வளாகத்தில் (டி.டி.டிஏ.பள்ளி) இருந்து காலை 6 மணிக்கு மாரத்தான் போட்டி தொடங்குகிறது.
இதில் பங்கேற்க 150 ரூபாய் பதிவு கட்டணம் ஆகும். இதில் வெற்றிபெறும் முதல் நபருக்கு ரூ-.2 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.,1,500, 3-வது பரிசாக ரூ-.1000, 4&வது பரிசாக ரூ.500 வழங்கப்படுகிறது. 5 முதல் 9-ம் இடம் வந்தவர்களுக்க தலா ரூ200 வழங்கப்படும். இதுதவிர கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் மற்றும் டி-சர்ட் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க 23-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இதுதொடர்பான தகவல்களுக்கு நிதின்- 99409 49666, அலெக்ஸ்- 9791993337 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடையம் ஒன்றிய வீரர்களுக்கான கபடிப்போட்டி நடத்தப்படுகிறது. இதில் முதல் பரிசாக ரூ.6 ஆயிரம், 2-வது பரிசு ரூ.4ஆயிரம், 3-வது பரிசு ரூ-.2 ஆயிரம், 4-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கும். இதில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் 31.12.2005க்கு பின் பிறந்திருக்க வேண்டும். ஆதார் கார்டு நகல் கொண்டு வர வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு நுழைவுக்கட்டணம் 150 ரூபாய் ஆகும். 27.12.2024க்குள் பதிவு செய்ய வேண்டும்.
இதுதொடர்பான விவரங்களுக்கு அலெக்ஸ்-9789383486 ஐ தொடர்பு கொள்ளலாம்.
போட்டிக்கான ஏற்பாடுகளை தலைவர் ஆர்.வைத்திலிங்கம், செயலாளர் ஜே.ஜீவா, பொருளாளர் ஆர்.தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.