21-ந் தேதி கடையம் திருவள்ளுவர் கழக ஆண்டு விழா- குன்றக்குடி அடிகளார் பேசுகிறார்
1 min read
The 21st anniversary of the Kadayam Thiruvalluvar Kazhagam – Kunrakudi Adikalar will speak
17.12.2024
தென்காசி மாவட்டம் கடையத்தில் திருவள்ளுவர் கழகம் இயங்கி வருகிறது. மாதந்தோறும் இந்த திருவள்ளுவர் கழகம் சார்பில் இலக்கிய கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கூட்டத்தின் போதும் தமிழ் அறிஞர்கள் அழைக்கப்பட்டு சிறப்புரை ஆற்றி வருகிறார்கள். மறைந்த பேராசிரியர் அறிவரசன்(குமாரசாமி) அவர்கள் மூலம் வாரந்தோறும் திருக்குறள் விளக்கம் அளிக்கப்பட்டது.
திருவள்ளுவர் கழகத்தின் 30-ஆவது ஆண்டு விழா வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) கடையம் தெற்கு ரத வீதியில் உள்ள நடராஜ் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
விழாவுக்கு திருவள்ளுவர் கழகத் தலைவர் தமிழ்த்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்குகிறார். டாக்டர் பரமசிவன் முன்னிலை வகிக்கிறார். திருவள்ளுவர் கழக செயலாளர் க.சோ.கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்று பேசுகிறார்.
தென்காசி திருவள்ளுவர் கழக தலைவர் ந.கனகசபாபதி விழா தொடக்க உரையாற்றுகிறார்.
ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத் துணைத் தலைவர் ச.மாடசாமி , அம்பை திருக்குறள் கல்வி அறக்கட்டளை பொருளாளர் புன்னைவன நாறும்பூநாதன், பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கிய பேரவை நிறுவனர் அ.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
திருவள்ளுவர் கழக செயற்குழு உறுப்பினர் க.சங்கரநாராயணன் நன்றி கூறுகிறார்.விழா ஏற்பாடுகளை திருவள்ளுவர் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.