சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min read
MK Stalin announces $1 million reward for those who solve the Indus Valley Civilization puzzle
5.1.2025
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று முதல் 7.01.2025 வரை மூன்று நாட்கள் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் , சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . மேலும், சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த மேனாள் இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் .
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின் கூறியதாவது ,
சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது என்று ஜான் மார்ஷல் கூறினார்.ஜான் மார்ஷலுக்கு சிலை அமைக்கும் பெருமை திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ளது.1948ஆம் ஆண்டிலேயே சிந்துவெளி அடையாளங்களை வெளிகொண்டு வந்தவர் அண்ணா.செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி நாகரிகத்தை அடையாளப்படுத்தியவர் கருணாநிதி என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும். கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருது வழங்கப்படும்.தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.