கடும் பனிப்பொழிவு: அமெரிக்காவில் 7 மாகாணங்களில் அவசரநிலை அறிவிப்பு
1 min read
Heavy snowfall: emergency declared in 7 states in the US
6.1.2025
புவி வெப்பமயமாதல் தாக்கத்தின் மறுவடிவமாக மாறிவரும் பருவநிலை எல்லா நாடுகளையும் கடுமையாக பாதித்து வருகிறது.
கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன. கான்சாஸ், இண்டியானா, மிசோரி, கென்டக்கி, லுயிஸ்வில்லி உள்ளிட்ட 7 மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.
கான்சாஸ் மற்றும் இண்டியானா மாகாணங்களில் 7.7 அங்குலங்கள் (19.5 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
கென்டக்கியின் லெக்சிங்டன், பனிப்பொழிவில் சாதனையை படைத்துள்ளது. அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பனியில் புதைந்துள்ளன.
வர்ஜீனியா, இண்டியானா, கன்சாஸ் மற்றும் கென்டக்கி ஆகிய இடங்களில் பனிப் பொழிவால் நூற்றுக்கணக்கான கார்கள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வடகிழக்கு கன்சாஸில் உள்ள நெடுஞ்சாலைகள் நடக்க முடியாத அளவுக்கு இருப்பதால் அந்த சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவால் 60 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.