ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 1000 வேலைகளில் சேர விண்ணப்பித்தவர்
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2025/01/ஏஐ-தொழில்-நுட்பம்.jpg)
A person applied for 1000 jobs using AI technology
10.1.2025
வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலக்கட்டத்தில் சமீபகாலங்களில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமோக வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் பலரின் வேலையை பறித்துவிடும் என்ற அச்சம் இருந்து வருகிறது. எனினும், இந்த தொழில்நுட்பம் பலருக்கு ஏராள நன்மையும் ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவர் 1000 வேலைகளில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளார். இவை அனைத்தும் அவர் தூங்கும் நேரத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஒரே மாதத்தில் 50 நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ரெடிட் இணையத்தில் கூறியிருப்பதாவது:-
வீட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு பாட்-ல் பெரிய வேலைகளும் எளிதாகிறது. தூங்கும் போது அனைத்து கடினமான பணிகளையும் ஏ.ஐ. முடித்ததுதான் சிறப்பம்சம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.ஐ. விண்ணப்பங்கள் எழுதுவதற்கும், லெட்டர், அறிக்கைகள், வேலைக்காக விண்ணப்பிக்க என பல்வேறு முறைகளில் உதவுகிறது.
(வெளிநாடு) பிலிப்பைன்சில் லேசான நிலநடுக்கம்
ரிக்டரில் 4.9 ஆக பதிவு
சூரிகாவோ டெல் சுர்,ஜன.11-
பிலிப்பைன்சில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.9 ஆக பதிவாகி இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் உள்ள ஹினதுவானில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது