ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
1 min read
District Collector inspects Alwarkurichi Town Panchayat
10.1.2025
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலக பணிகள் வளர்ச்சி திட்டப்பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் 2022-23 ஆண்டு அம்ரூத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளில் ஆழ்வார்குறிச்சி கடனா ஆற்றில் புதிதாக அமைக்கப்பட்ட உறைகிணறு பணி, இராமலிங்கம் தெருவில் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டி, திருநீலகண்ட விநாயகர் கோவில் தெரு காவல்நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி, கல்யாணிபுரம் கடனா ஆற்றில் உறை கிணறு கட்டும் பணிகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்கள்.
பின்னர் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதி செங்கானுர் செல்லும் வழியில் உள்ள இரயில்வே துறைக்கு சொந்தமான தரைவழி சுரக்கப்பாதை பார்வையிட்டதில் மாற்று வழிப்பாதை அமைத்நிட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்கள்.
மேலும் கல்யாணிபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம், நீர்வளத்துறை கட்டிடம் ஆகியன நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்நிகழ்வில் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி மன்ற தலைவர்,ச.சரசு, துணைத்தலைவர் சு.சங்கர், பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ், பேரூராட்சி இளநிலை பொறியாளர் , அம்ரூத் திட்ட பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.