மீண்டும் 59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
1 min read
Gold price approaches 59 thousand again
13.1.2025
தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது. கடந்த மாதம் (டிசம்பர்) 26, 27-ம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில் மறுநாள் ரூ.360 குறைந்தது.
இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் 59 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.