பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 4 பேர் பலி
1 min read
4 people die after being slitting their throats with a thread tied to a degree
14.1.2025
தை முதல்நாள் வடமாநிலங்களில் மகர சங்கராந்தி, உத்தராயண் பண்டிகை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தை முதல்நாள் குஜராத்தில் உத்தராயண் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் வானில் பட்டம் விட்டு கொண்டாடுவது வழக்கம்.
இதனிடையே, உத்தராயண் பண்டிகையையொட்டி குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வண்ணவண்ண பட்டமிட்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், குஜராத்தில் உத்தராயண் பண்டிகையின்போது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து இன்று ஒரேநாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தின் பஞ்ச்மகால் மாவட்டம் ஹலோல் நகரில் குர்னால் பர்மர் (வயது 4) என்ற சிறுவன் தனது தந்தையுடன் பைக்கில் சென்றார். அப்போது பட்டத்தின் மாஞ்சா நூல் சிறுவன் குர்னாலின் கழுத்தை அறுத்தது. இதில் அச்சிறுவன் உயிரிழந்தான்.
அதேபோல், மஹாசனா மாவட்டம் வட்பார் பகுதியை சேர்ந்த மன்சாஜி (வயது 35) இன்று காலை பைக்கில் தனது தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, பட்டத்தின் மாஞ்சா நூல் அவரின் கழுத்தை அறுத்தது. இதில் படுகாயமடைந்த மன்சாஜி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.