செட்டியூரில் 9ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள்
1 min read
9th Annual Sports Competitions in Chettiyur
17.1.2025
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம், செட்டியூரில் நடைபெற்ற 9ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும், செட்டியூர் திமுக சார்பில 9ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ் தலைமை தாங்கினார் திமுக மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோணவிளையூர் திமுக கிளை செயலாளர் பரமசிவன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பெர்றுப்பாளர் வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளல வழங்கி பாராட்டி பேசினார். முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி 2 இடங்களில் திமுக கொடியினை அவர் ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்பிஎம்.அன்பழகன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக்முகமது, துணை அமைப்பாளர்கள் ஷபீக் அலி, ராமராஜ், வேல்சாமி, நகராட்சி தலைவர்மூப்பன்ஹபிபூத் ரஹ்மான், உதயசூரியன் நற்பணி மன்ற நிர்வாகிகள் முருகேசன், மூக்கன், பரமசிவன், ரவிச்சந்திரன், சேர்மசெல்வன், சங்கர், குணம், பூசமணி, சின்னமாரி, தேன்ராஜ், பரமசிவன், செல்வன், வினோத்ஆனந்த், இசக்கிமுத்து, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.