அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிம்ப்புக்கு மோடி வாழ்த்து
1 min read
Modi congratulates Trump on taking office as US President
21.1.2025
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்டுள்ள டிரம்பிற்கு உலக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியும் டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
“உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வெற்றிகரமான பதவிக்காலமாக அமைய வாழ்த்துக்கள்.
நெருங்கிய நண்பர் டிரம்ப் உடன் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.