கருத்தப்பிள்ளையூர்: 2 கொலை குற்றவாளிகளுக்கு குண்டாஸ்- எஸ்பி நடவடிக்கை
1 min read
Gundas-SP action against 2 murder suspects
23.1.2025
தென்காசி மாவட்டம்,
ஆழ்வார்குறிச்சி அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகள் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ் அரவிந்த் பரிந்துரையின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்கைகுட்பட்ட கருத்தப் பிள்ளையூர் பகுதியில் கடந்த 21.12.2024 அன்று இருதயராஜ் (வயது 42) என்பவரை சொத்து பிரச்சனையில் கொலை செய்த வழக்கில் கருத்தப்பிள்ளையூர் பகுதியை சேர்ந்த அருள் என்பவரின் மகன்களான ஆரோக்கியசாமி (வயது 38) மற்றும் ஜெயபால் (வயது 40) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொலை குற்றவாளிகள் ஆரோக்கியசாமி ஜெயபால் இருவர் மீதும்
பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நபர்களும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
i