July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

அசாம்: முதியோர் இல்லத்தில் காதலித்து திருமணம்

1 min read

Assam: Love and marriage in an old age home

25/1/2025
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.
கோலாகட் மாவட்டத்தில் உள்ள போககாட் பகுதியை சேர்ந்தவர் பத்மேஸ்வர் கோலா (வயது71). வீட்டு வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவரது 2 சகோதரர்களும் காலமான நிலையில் பெல்டோலா பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

இதே போல சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூரை சேர்ந்தவர் ஜெயபிரபா (வயது65), திருமணமாகாத இவர் கவுகாத்தியில் மத்காரியா பகுதியில் பெண்களுக்கான முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சந்தித்துள்ளனர். பத்மேஸ்வர் கோலா குரல் வளமிக்கவர். இவர் பிகு மற்றும் இந்தி பாடல்களை பாடுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது குரலில் மயங்கிய ஜெயபிரபா, பத்மேஸ்வருடன் பேசிய போது மனதை பறிகொடுத்தார்.
இருவரும் காதலித்து வந்ததை அறிந்த முதியோர் இல்லத்தினர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்தை மோனாலிசா சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி உள்ளது.

இதையொட்டி மணமக்கள் அசாம் பாரம்பரிய முறைப்படி உடைகள் அணிந்து வந்தனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

இதுகுறித்து அந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான உத்பால் ஹர்சவர்தன் கூறுகையில், பொது நிதி உதவியுடன் இந்த திருமணம் நடைபெற்றது. சுமார் 4 ஆயிரம் விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் விருந்து பரிமாறினோம் என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.