தமிழகத்தை சேர்ந்த 21 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது
1 min read
Presidential awards to 21 police officers from Tamil Nadu
25.1.2025
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றிய மாநில போலீஸ் அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி விருது மற்றும் பதக்கம் வழங்கப்படும். இந்த ஆண்டு நாடு முழுவதும் 746 பேருக்கு ஜனாதிபதி விருதுகள், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழக காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் சிறப்பாக செயல்பட்டதற்கான ஜனாதிபதி விருது தமிழகத்தை சேர்ந்த ஜ.ஜி.க்கள் துரைக்குமார், ராதிகா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தை சேர்ந்த 21 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். தமிழகத்தை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயலட்சுமி, ஜி.ஸ்டாலின், கூடுதல் சூப்பிரண்டுகள் எஸ்.தினகரன், பிரபாகரன், துணை கமிஷனர் வீரபாண்டி, இணை போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாபு மற்றும் போலீஸ் அதிகாரிகள் சந்திரசேகரன், கணேஷ், ஜெடிடியா, பிரபாகர், பிரதாப் பிரேம்குமார், தென்னரசு, வேலு, அகிலா, குமார், அசோகன், சுரேஷ்கு மார், விஜயலட்சுமி, சிவகுமார், ஆர்.குமார் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை விருது வழங்கி கவுரவிக்கிறார்.