கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
1 min read
Tamil Nadu government announces salary hike for Co-optex employees
30.1.2025
தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாகச் செயல்படுகிறது. இதற்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு அளிக்ககோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு தேராயமாக 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொது மேலாளர் முதல் 10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய நிலையை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 2023 ஜுலை மாதம் முதல் நடைமுறைக்கும் வரும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.