போராட்டம் நியாயமானதால் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: அண்ணாமலை பேட்டி
1 min read
30.1.2025
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் இன்று அரிட்டாபட்டி சென்றார்.அங்கு செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:-
“அரிட்டாபட்டி சுற்றுவட்டார பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மாநில அரசின் மிரட்டலுக்கு எல்லாம் பிரதமர் மோடி அரசு அஞ்சுவதில்லை.
மக்களின் போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய மந்திரி கிஷன் ரெட்டி வந்திருக்கும் இந்த நாள் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் பிரச்சினை என்றால் மத்திய அரசு ஓடோடிவரும். எப்போதும் தமிழகத்திற்கு தோழனாக பிரதமர் மோடி இருப்பார். மண்ணின் மைந்தர்களுக்காக பிரதமர் மோடி இந்தத் திட்டத்தை ரத்து செய்துள்ளார். சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டதால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.