August 19, 2026

Seithi Saral

Tamil News Channel

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததால்வீடு, வாகனக் கடன்களுக்கான இஎம்ஐ குறையும்

1 min read

EMIs on home, auto loans to come down as RBI cuts repo rate

7.2.2025
வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வீடு மற்றும் வாகனக் கடன் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

சக்திகாந்த தாஸுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த டிசம்பரில் பதவியேற்றார். அவரது தலைமையில் இன்று பணவியல் கொள்கை குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், ரெப்போ விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்து 6.25 சதவீதமாக மாற்றும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதனால் வங்கிக் கடன் வாங்குபவர்களின் வட்டி, இஎம்ஐ குறைய வாய்ப்புள்ளது. கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து இஎம்ஐ (எமி) குறையும்.

கடைசியாக கடந்த 2020 கோவிட் சமயத்தில் ரெப்போ விகிதத்தில் 40 அடிப்படைப் புள்ளிகளை, ரிசர்வ் வங்கி குறைத்தது. ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ரெப்போ விகிதம் எனப்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *