June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி

1 min read

Arvind Kejriwal, Manish Sisodia lose in Delhi Assembly elections

8.2.2025
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுட்டனன. இதில் பாஜக அறுதிபெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது.

இந்நிலையில் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.
பர்வேஷ் வர்மா 28238 வாக்குகள் பெற்ற நிலையில் 3789 வாக்குகள் பின்தங்கி 24449 வாக்குகளுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவைச் சந்தித்தார்.
அதேபோல ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வியை தழுவினார்.
பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் 34,632 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்ற நிலையில் 572 வாக்குகள் வித்தியாசத்தில் மணீஷ் சிசோடியா பின்தங்கினார்.
ஆம் ஆத்மியின் முக்கிய முகங்களான கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகி திகார் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *