August 19, 2026

Seithi Saral

Tamil News Channel

27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி

1 min read

BJP wins Delhi Assembly elections by a landslide after 27 years

8.2.2025
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் அது ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது. இது அக்கட்சியினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் 4.30 மணியளவில் வெளியான தகவலின்படி, பா.ஜ.க. 40 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. 8 இடங்களில் முன்னிலையில் இந்தது.
இதேபோன்று, ஆம் ஆத்மி கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. 4 இடங்களில் முன்னிலை பெற்று இருந்தது.
இறுதியில் பாஜக 48 இடங்களையும் ஆம்ஆத்மி 22 இடங்களையும் பெற்றது.
பெரும்பான்மை பெற 36 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க. 48 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதனால், அக்கட்சி 27 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தைக்கூட பெறவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *