டெல்லி சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி அதிஷி வெற்றி
1 min read
Chief Minister Atishi wins Delhi Assembly elections
8.2.2025
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக அம்மாநில முதல்-மந்திரி அதிஷி போட்டியிட்டார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன..
இந்நிலையில், கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட்ட அம்மாநில முதல்-மந்திரி அதிஷி வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 989 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி வீழ்த்தியுள்ளார்.
இதற்கிடையே, புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஜங்புராவில் மணீஷ் சிசோடியா, ஷகுர் பஸ்தியில் சத்யேந்திர் ஆகிய ஆம் ஆத்மியின் பிற முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.